ஸ்மார்ட் போன்களால் ஏற்படும் பிரச்சனைகள்
Aug 13, 2021
"நோமோபோபியா" (“Nomophobia”) - மொபைல் சாதனம் இல்லாமல் போனால் என் வாழ்க்கை என்ன ஆகும்? எப்படி மொபைல் போன் இல்லாமல் இருப்பது என்ற பயம் இப்போது ஒரு தீவிர பிரச்சினையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நோமோபோபியாவுடன் தொடர்புடைய பல உடல்நலப் பிரச்சினைகள் உள்ளன.
1. மணிக்கட்டு மற்றும் விரல்களில் பிரச்சனைகள்:
-
விரல்கள் சுருக்கம் அடைதல்
-
கார்பல் டன்னல் நோய் (Carpal Tunnel Syndrome)
-
மணிக்கட்டு வலி
-
தசை வலி
-
தோள்பட்டை மற்றும் கை வலி
2. கண்பார்வை பிரச்சினைகள்:
-
விழித்திரை சேதம் அடைதல்
-
மேக்குலர் சிதைவு (Macular degeneration)
-
மத்திய பார்வை இழப்பு (Central Vision loss)
-
மிதவைகள் (Floaters)
-
கண்கள் உலர்ந்து போதல் (Dry eyes)
3. முதுகு பிரச்சினைகள்:
-
தொலைபேசியில் மூழ்கி இருப்பது முதுகுவலியை ஏற்படுத்துகிறது
-
45% இளைஞர்களுக்கு (16 முதல் 24 வயது வரை) போன்களால் முதுகுவலி ஏற்படுகிறது.
-
குறுஞ்செய்திகள் அனுப்புவது (Texting) முதுகெலும்பில் 50 பவுண்டுகள் அழுத்தத்தை சேர்க்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றது.
4. நரம்பு சேதம் அடைதல்:
-
ஆக்ஸிபிடல் நியூரல்ஜியாவை (Occipital neuralgia) ஏற்படுத்தும்.
-
முதுகெலும்பின் உச்சியில் இருந்து உச்சந்தலை வழியாக ஓடும் நரம்புகள் சுருக்கம் அல்லது வீக்கமடைகின்றன.
-
கடுமையான தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
5. கவலை மற்றும் மனச்சோர்வு:
-
அறிவிப்புகளின் (Notifications) எதிர்பார்ப்பு அல்லது அதன் பற்றாக்குறை காரணமாக மனச்சோர்வு ஏற்படுகிறது.
-
அருகில் இருப்பவருடன் உரையாடுவதில்லை.
-
ஆன்லைன் விளையாட்டுகளிலிருந்து மன அழுத்தம்
-
24/7 அழைப்பில் இருப்பது.
6. சமூக திறன்களை இழத்தல்:
-
மொபைல் போனுக்கு அடிமையான பயனர்கள் சமூகத்தில் பழகுவது கடினம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
-
சமூக அமைப்புகள் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகின்றன.
-
சிலர், வீட்டை விட்டு வெளியேறுவது கூட சாத்தியமில்லாமல் போகிறது.
7. உடல் பருமன்:
-
நிலையான தொலைபேசி பயன்பாடு, மற்ற செயல்பாடுகளுக்கான நேரத்தை முடக்குகிறது.
-
உடல் உழைப்பு இல்லாமல் போகிறது.
-
மொபைல் போன் போதைக்கு அடிமையானவர்கள் அதிகம் சாப்பிடுவார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன
-
சோம்பல் அதிகரித்து உற்பத்தித்திறனை குறைக்கிறது.
8. பிற பிரச்சனைகள்:
-
சத்தத்தினால் தூண்டப்பட்ட காது கேளாமை (Noise induced hearing loss).
-
கதிர்வீச்சு (Radiation).
-
அதிக வெப்பமான பேட்டரிகள் காரணமாக ஏற்படும் தீ காயங்கள்.
-
வாகனம் ஓட்டும்போது போன்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சாலை விபத்துகள்.
-
வேலை செய்யும் போது ஏற்படும் விபத்துகள்.
முடிவுரை:
செல் போனை அளவோடு தேவைக்காக மட்டுமே பயன்படுத்துவோம். அதிகமாக பயன்படுத்தி அடிமையானால், மேற்கண்ட உடல்சார்ந்த நோய்கள் கட்டாயம் லைப் லாங் பேக்கேஜாக உங்கள் வாழ்க்கையில் புகுந்து, நீங்கள் மருத்துவமனைகளுக்கும் மருந்துகளுக்கும் ரீசார்ஜ் செய்வதை யாராலும் தடுக்க முடியாது.
Recent Post

Why Should You Book Lab Tests Online?

Type 2 Diabetes Mellitus

Type 1 Diabetes Mellitus
_CAT_1684759383.jpg)
Tooth Cavities

Understanding Diabetes: Fasting and Other Essential Sugar Tests

Top 10 Essential Skincare Tips for Healthy and Glowing Skin

Summer Skincare Routines and Sunscreen Recommendations

5-Minute Skincare Routine for Oily Skin

5-Minute Skincare Routine for Dry Skin

நமது வாழ்க்கையில் இன்சுலினின் பங்கு